தேமுதிக திடீர் முடிவு: NDA கூட்டணியில் சலசலப்பு- அடுத்தடுத்த பரபரப்பு
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்டதால் அமமுக. பாமக கூடுதல் தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக, பாஜக, அமமுக, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இணைந்து NDA கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இதற்கான முதல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது, அடுத்த மார்ச் பிரதமர் மோடி மூன்று முறை தமிழகம் வரவிருக்கிறார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேமுதிக, திமுக-வுடன் கூட்டணி என அறிவித்துவிட்டது, இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாம், அதிமுகவை கடிந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக-வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக விருப்பம் காட்டிய போதும், அதிமுக ஈடுபாடு காட்டவில்லை என கூறப்படுகிறது.
இதுதான் தேமுதிக ஆளும் கட்சி பக்கம் சாய காரணம் என பாஜக கூறிவருகிறதாம்.

இந்நிலையில் தேமுதிக-வுக்கு வழங்கவிருந்த தொகுதிகளை தங்களுக்கு தருமாறு அமமுக கேட்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அமமுக-வுக்கு அதிக இடம் கொடுத்தால் பாமக-வும் கேட்கும் என்பதால் என்னசெய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறதாம் அதிமுக.
தொகுதி பங்கீடு குறித்த முடிவு எட்டப்பட்ட பிறகே, கூட்டணி அறிவிப்பு வெளியாகியிருக்கும், ஒருவேளை அதிக தொகுதிகள் என்றால் இதற்கு பாஜக எப்படி ஒத்துக்கொள்ளும்? என்ன செய்வது? என தெரியாமல் முழிக்கிறது அதிமுக.