அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் திரண்ட பக்தர்கள்!
By Vinoja
குடியாத்தம் அருகே அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பெருமளவான பக்தர் கூட்டம் கோவிலை நோக்கி திரண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே அமைந்துள்ள ஏர்த்தாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் உடனுறை உமாமகேஷ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
குறித்த கோவிலில் காணப்படும் மூலவர் அம்மன் சிலையில் இருந்து நேற்று 4 ஆம் திகதி மாலை திடீரென பால் வடிந்துள்ளது.
இந்த தகவல் சுற்றுப்புற கிராமங்களிலும் பரவியதால், பெருமளவான பக்தர் கூட்டம் கோவில் திரண்டு இந்த காட்சியை கண்டு பரவசமடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் கோவிலில் பக்கதர்களின் வருகை அதிகரித்தமையால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.