காழ்புணர்ச்சி இருந்திருந்தால் அம்மா உணவகம் இயங்குமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இந்த நிலையில் மெரினாவில் உயர்கல்வி மன்றத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை என அதிமுக புகார் தெரிவித்தது.
ஜெயலலிதா சிலைக்கு ஒரு மாத காலமாக மாலை அணிவிக்கவில்லை என்றும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியிருந்தார்.
இதற்கு பேரவையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை.என்பதற்கு அம்மா உணவகமே உதாரணம்.
காழ்புணர்ச்சியுடன் செயல்பட தொடங்கியிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்து இயங்குமா? என கேள்வி எழுப்பினார்.
அதே சமயம் ஜெயலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு மீது குற்றம்சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.