அண்ணா அறிவாலயமே.. அம்மா உணவகத்தை மூடலாமா ? : மீண்டும் ட்விட்டரில் வம்பிழுக்கும் அண்ணாமலை

annamalai ammaunavagam BJPTAMILNADU
By Irumporai Nov 02, 2021 11:01 PM GMT
Report

ஏழைகள் பசி பிணி போக்கும் அம்மா உணவகத்தை மூடலாமா என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த , சில நாட்களாக ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களுடன் ட்விட்டர் யுத்தம் செய்து வரும் பாஜக அண்ணாமலை தமிழக அரசை தமது கேள்விகளால் மீண்டும் துளைத்தெடுத்து இருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் :

ஏழைகள் பசியாற எளிதாய் உணவளித்து, அன்னையின் பரிவோடு, அவசிய உணவளித்த, அம்மா உணவகத்தை @arivalayam மூடலாமா?

Amma unavagam annamalai question மக்கள் பயன்படுத்தும் மகத்தான திட்டத்தை, மாற்றுக் கட்சி தொடங்கியதால், மறுக்கலாமா? விருந்தோம்பல் நம் மரபல்லவா?

ஏழைகள் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகத்தை எதிர்க்காமல் தொடரவும் என்று கூறி இருக்கிறார். அண்ணா அறிவாலயம், அம்மா உணவகத்தை மூட வேண்டாம் என்ற இந்த கோரிக்கைக்கு கட்சி பேதமின்றி ஆதரவுகள் வருவது தான் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் .

ஏழைகள் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகத்தை எதிர்க்காமல் தொடரவும் என கூறியுள்ளார்.