அமமுக சார்பில் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார் டி டி வி தினகரன்

election Dhinakaran ammk
By Jon Mar 11, 2021 04:22 PM GMT
Report

அமமுக கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் டி.டி.வி தினகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த வடிவில் தேர்தல் வந்தாலும், தங்களுடைய தலைவர் இந்தத் தொகுதியில்தான் போட்டியிட வேண்டுமென்பது பலரின் விருப்பம்.

இந்த விருப்பங்கள் தங்களுடையத் தலைவரின் மீதான அபிமானத்தைக் காட்டுவதாக இருந்தாலும் ஒரு சிலரின் விருப்பமும் நிறைவேறுவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், “டி.டி.வி. தினகரன், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது” என்கிறார் அ.ம.மு.க. தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்கராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த கூற்று மெய்ப்பிக்கும் வகையில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.