"அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க வீரசபதம் எடுப்போம்" - எடப்பாடி பழனிசாமி
cm
politician
edappadi
By Jon
அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிமொழி எடுப்போம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைத்தார்.
இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது செய்த நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி மீண்டும் அதேபோன்ற நல்லாட்சியை அமைக்க வீரசபதம் எடுப்போம் என தெரிவித்தார்.