வரிசையாக கொரோனாவின் பிடியில் சிக்கும் திரைபிரபலங்கள்..! அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சுபா கொரோனாவால் பலி..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினசரி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், நடிகர் பாண்டு, நடிகர் நிதிஷ் வீரா உள்ளிட்ட திரைபிரபலங்கள் சமீபத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் வெங்கட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டிருந்தார்.
என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் #வெங்கட் சற்றுமுன் 12.48 am க்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்
— T Siva (@TSivaAmma) May 28, 2021
T. சிவா pic.twitter.com/LMDkiFWi8b