அம்மா கிளினிக் ல் பேய்கடிக்கும் மருந்து உண்டா? திகில் கிளப்பிய அமைச்சர்

india politician Pandiarajan
By Jon Feb 18, 2021 03:12 PM GMT
Report

பாம்பு கடிக்கு மட்டுமல்ல பேய்கடிக்கும் அம்மா கிளினிக்கில் மருந்து உண்டு என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டரை, கடலூர் கொடூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட 4 கிராமங்களில் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மினி கிளினிக் திறந்து வைத்தார்.

பெரும்பாக்கம் கிராமத்தில் மினி கிளினிக் திறந்து வைத்து அவர் பேசும்போது,தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்கை திறக்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் திறக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய அமைச்சர் ஒரு கிராமத்திற்கு முக்கியமானது கோயில் பள்ளிக்கூடம் அதுபோல இந்த மினி கிளினிக் ல் ஆஸ்பத்திரியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய மருந்துகளும் ஒரு டாக்டர், ஒரு துணை மருத்துவர், நர்ஸ், ஒரு உதவியாளர் என 4 பேர் இருப்பார்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன்,இந்த அம்மா மினி கிளினிக்கில் பாம்புகடி, நாய்கடியென எல்லா கடிக்கும் மருந்துகள் உண்டு என்றவர், ஆமா, பேய் கடி இருக்கா என்ன? என அமைச்சர் கேட்டார். தற்போது அமைச்சரின் பேய்க்கடி பேச்சுதான் இணையத்தில் வேக வேகமாக வைரலாகி வருகிறது.