தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளது.
மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை பெரியார் திடலில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிறப்பு மையத்தை திறந்து வைத்தார்.
இதனையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது -
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது. அம்மா மினி கிளினிக்குகள் என்பது தற்காலிக அமைப்புதான். போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்து வந்தது. இத்திட்டம் என்பது தற்காலிகமானது. ஓராண்டு அடிப்படையில் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. இந்த கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட 1,820 மருத்துவர்களும் மற்ற பணிகளுக்கு மாற்றப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.