பயங்கரமா தலைமுடி உதிர்கிறதா? இந்த ஓரே ஆயுதம் போதும்!
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க முக்கிய டிப்ஸ் குறித்துப் பார்ப்போம்.
தலைமுடி வளர்ச்சி
தலை முடி உதிர்வு என்பது, பலருக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த குளிர்காலத்தில் தலைமுடி உதிர்விலிருந்து தங்களை பாதுகாக்க நெல்லிக்காய் எவ்வாறு உபயோகப்படுகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கி தலைமுடியில் மசாஜ் செய்துவர ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
நெல்லிக்காய் பலன்கள்
நெல்லிக்காயை பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம். 30 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு தலைமுடியை அலச வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு பிரச்சனை குறையும்.
தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் கருமையாக மாறும்வரை காத்திருந்து பிறகு வடிகட்டவும். இதனை முடியில் மசாஜ் செய்யலாம். உதிர்வு குறைந்து, அடர்த்தியான தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.
நெல்லிக்காய் ஜூஸில் தண்ணீர் சேர்த்து தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு இதனைக் கொண்டு அலசவும். தலைமுடியை வாரம் இருமுறை இந்த நெல்லிக்காய் சாறு கொண்டு அலசினால் பளபளப்பு கிடைக்கும்.
நெல்லிக்காய் பொடியுடன் மருதாணியை கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஹேர் பேக் ஒன்றை தயார் செய்து, முடியில் தடவி ஒரு மணி நேரம் இதனை ஊற வைத்துவிட்டு பிறகு அலச வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இதனை செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.