குருதி நெல்லி..இத்தனை நோய்களை குணப்படுத்துமா? மகத்தான தகவல்!

Cranberry
By Sumathi Jul 13, 2022 11:54 AM GMT
Report

பெர்ரி பழங்களினால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவைகளில் அதிக நன்மை தரும் ஒன்று குருதி நெல்லி. குறைந்த கலோரிகள், நிறைய சத்துகள், அதிக படியான மருத்துவ பலன்கள்.

குருதி நெல்லி..இத்தனை நோய்களை குணப்படுத்துமா? மகத்தான தகவல்! | Amla Can Cure So Many Diseases

குருதி நெல்லியால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதை எந்த முறையில் உட்கொள்வது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். குருதி நெல்லி என்னும் கிரான் பெர்ரி ஊட்டசத்து நிறைந்த இந்த பழங்கள் குளிர் பிரதேசங்களில் அதிகமாக விளையும்.

தற்போது வட அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதற்காக அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள், வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். குருதி நெல்லியை அப்படியே எடுத்துக்கொள்வதை விட பழச்சாறாக உட்கொள்வது அதிக பலனளிக்கும்.

குருதிநெல்லி பழச்சாறு - எப்படி செய்யலாம்?

ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து குருதி நெல்லிக்கனிகளை குறைந்த கொதி நிலையில் வேக வைக்க வேண்டும். 10-15 நிமிடங்கள் வேக வைத்தப்பின்னர் வடிகட்டினால் போதும். குருதிநெல்லி ஜூஸ் ரெடி.

குருதி நெல்லி..இத்தனை நோய்களை குணப்படுத்துமா? மகத்தான தகவல்! | Amla Can Cure So Many Diseases

இந்த ஜூஸ் போதும் உங்களை பல நோய்களில் இருந்து காப்பாற்ற. இதால் கிடைக்கும் பல நன்மைகளில் சிலவற்றை அறியலாம்.

 பொதுவான மருத்துவ பலன்கள்

கடுமையான கொழுப்புகளையும் கரைக்க கூடிய தன்மை வாய்ந்தவை குருதி நெல்லி பழங்கள். கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளைக் கூட கரைத்துவிடும். நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கறைத்து உடம்பை சீர் செய்யும் வல்லமை படைத்தது.

குருதி நெல்லி..இத்தனை நோய்களை குணப்படுத்துமா? மகத்தான தகவல்! | Amla Can Cure So Many Diseases

நீரிழிவு, கீல்வாதம் (Gout arthritis),பல் ஈறு நோய், ஈஸ்ட் தொற்றுகள் ஆகியவற்றையும் குணமடைய செய்யும் தன்மை குருதி நெல்லியிடம் உண்டு.

  சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்கு சிறப்பான தீர்வு

பெண்களை அதிகமாக பாதிக்கும் ஒரு மோசமான நோய் சிறுநீர் பாதைத் தொற்று. இதற்கு காரணம் பெண்களின் உடலமைப்பு தான். ஆசன வாய்க்கும், யூரித்திராவிற்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் அடிக்கடி இந்த வியாதியால் பதிக்கப்படுகின்றனர்.

சில ஆண்களும் இந்த தொற்றால் பாதிப்படைவர். இந்த தொற்றை தடுப்பதில் குருதி நெல்லிக்கு பெரிய பங்கு உண்டு. இதில் உள்ள டி-மனோஸ் என்று அழைக்கப்படும் பொருள் சிறுநீரக மூலக்கூறு நோய்களைத் தடுக்க உதவும்.

குருதி நெல்லி சாறுடன், பசலைக்கீரை சாறு, அவுரி நெல்லி (blueberry) சாறு ஆகியவற்றுடன் சேர்த்து குடிப்பது அதிக அளவில் பலனளிக்கும். அதிலும் சர்க்கரை இல்லாமல் அருந்தினால் நல்ல முன்னேற்றம் தெரியும் என்று கூறப்படுகிறது.

குருதி நெல்லியால் சிறுநீர் பாதை தொற்ருகளை தடுக்கத்தான் முடியுமே தவிர குணப்படுத்த முடியாது. அதிக அளவில் எடுத்துக்கொண்டால் இதுவே சிறுநீர் பிரச்சனைகளை தந்துவிடும்.

  மாரடைப்பிலிருந்து காப்பாற்றும்

இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவுகள் அதிகளவில் இருந்தால் இருதய அடைப்புகள் ஏற்பட்டு மாரடைப்பு வரக்கூடும். அந்த அளவுகளை குறைக்கும் தன்மை குருதி நெல்லிக்கு உண்டு. குருதி நெல்லியில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவைகள்

இரத்த நாளங்களுக்கு தளர்வு அளிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

 கேன்சரை தடுக்கும் கிரான்பெர்ரி

2016-ம் ஆண்டு நடந்த ஒரு ஆராய்ச்சியில் 17 வகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மை குருதி நெல்லிக்கு உள்ளது என்று கண்டறியப்பட்டது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பாலிபினால்கள் புற்றுநோய் உயிரணு பெருக்கம் மற்றும்

மெட்டாஸ்டாசிஸை நிறுத்தி கட்டி உருவாக்கம் மற்றும் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோயிலிருந்து உங்களை காக்கும்.

 சருமத்துக்கு பொலிவூட்டும்

அழகான மினுமினுப்பான சருமம் வேண்டும் என்பது அனைவரின் ஆசை. குருதிநெல்லியில் 24 சதவிகிதம் வைட்டமின் சி உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும். இனி ஆண்டு தோறும் குருதி நெல்லியை எடுத்துக்கொள்ள போகிறீர்கள் என்று தெரிகிறது. கொஞ்சம் பொறுங்கள்....

 கிரான் பெர்ரியின் பக்க விளைவுகள்

சரியான அளவு எது, அது உங்கள் உடம்புக்கு சரிவருமா என்று மருத்துவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு உங்கள் டையட்டில் இந்த வகை பெர்ரியை சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 1 லிட்டருக்கு மேல் அருந்தினால் நிறைய பாதிப்புகள் ஏற்படுத்தலாம்.

சில மருந்துகளுடன் எடுத்துக்கொள்ளும் போது எதிர்வினையாற்ற வாய்ப்புகள் இருக்கிறது. அதிக அளவில் உட்கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்புள்ளது. இரத்ததில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்க கூடும்.

பச்சையாக சாப்பிட்டலும் சரி, பழச்சாறாக குடித்தாலும் சரி, அளவாக எடுத்துக்கொண்டால் குருதிநெல்லி ஜூஸும் அமுதுக்கு சமம் தான்.

-வ சபரிதா