"அமித்ஷா தோல்வி பயத்தில் பேசுகிறார்": உதயநிதி ஸ்டாலின் பதிலடி
ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து அமித்ஷா பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது அவர் தமிழகத்தில் திமுக கட்சி வாரிசு அரசியல் செய்வதாகவும். மேலும் முக ஸ்டாலின் தந்து மகனை முதல்வராக்க முயற்சிக்கிறார்.
மக்களின் நலனுக்காக பாடுபடுவார்கள் பின் செல்வதா? அல்லது மகனை முதல்வராக்க நினைப்பவர் பின் செல்வதா? என சிந்தியுங்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்கையில் ‘‘பரிதாபம்... அமித் ஷா தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. மூன்று வருடங்களாக அவர்கள் செய்த மோசடியை ஒரு செங்கலை வைத்து வெளிப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.