அமித்ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோவிலில் கட்டுப்பாடுகள்
Amit Shah
By Fathima
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தர இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை(8.6.2025) முகூர்த்த தினம் என்பதால் காலை முதலே மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அனைத்து கோபுர வாசல்களிலும் பொலிசார் குவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன.