அதிமுக- பாஜக கூட்டணி? விரைவில் அறிவிப்பு- அமித்ஷா
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், சரியான நேரம் வரும் போது அறிவிப்பு வெளியாகும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் மூலம் தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் கொள்கைகளால் தமிழகம் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் தேசிய கல்விக்கொள்கையையும், மருத்துவம், பொறியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிப்பது குறித்தும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் அதை தொடங்கவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.