நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆட்டிபடைத்த கொரோனா
கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவிய அந்த வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்தது.
அதன் பாதிப்பு இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. அது உருமாறிக்கொண்டே இருப்பதனால் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதும் மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் முன்பை விட தற்போது பாதிப்பு வீதம் பெருமளவு குறைந்துள்ளது என்பது சற்று ஆறுதலான விஷயம்.
இரண்டாவது முறையாக கொரோனா
இந்த நிலையில் இந்திய திரைப்பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அந்த வகையில்பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[
இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.