அமிதாப்பச்சனுக்கே இப்படி ஒரு நிலைமையா? - அதிர்ச்சியில் திரையுலகம்
பட வாய்ப்பு குறித்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்த கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது மொழிகள் கடந்து அனைத்து மாநில மக்களுக்கும் தெரிந்த ஒன்று.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதி அந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி இதன் 1000வது எபிசோடு ஒளிபரப்பானது.
அப்பொழுது அமிதாப்பச்சனின் மகள் ஸ்வேதா, பேத்தி நவ்யா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மனைவி ஜெயாபச்சன் ஆன்லைன் மூலம் பேசினார்.
இந்த 1000வது எபிசோடு பற்றி என்ன நினைக்கிறீர்கள் அப்பா என ஸ்வேதா கேட்க அமிதாப் சொன்ன கருத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிகழ்ச்சி துவங்கி 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்ததால் என் இமேஜ் பாதிக்கும் என்று பலர் கூறியது இன்னும் நினைவிருக்கிறது.
அந்த நேரத்தில் எனக்கு பெரிதாக வேலை கிடைக்கவில்லை. முதல் எபிசோடுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இந்த உலகம் மாறிவிட்டது என்று தோன்றியது என்றார்.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் அமிதாப்பச்சன். அப்படி இருக்கும்போது அவருக்கே பட வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு வந்தது பற்றி வெளியான தகவல் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.