மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபமோ? – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
தனது கேள்விகளுக்கு அமித்ஷா பதில் தரவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேட்டூர் அணை திறப்பு
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்போது நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய முதலமைச்சர் பிரதமர் மோடி மீது மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு என்ன கோபமோ என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தை வரவேற்றார். தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி தான். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உள்நோக்கம் என்னெவென்று தெரியவில்லை, தமிழர் பிரதமர் ஆவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும் என கூறினார்.
தமிழர் பிரதமர்
எனவே, தமிழரை பிரதமராக்க வேண்டும் என்பதன் மூலம் பிரதமர் மோடி மீது அமித்ஷாவிற்கு என்ன கோபம் என தெரியவில்லை என முதல்வர் விமர்சித்தார். 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என நம்புகிறேன்.
பாஜக ஆட்சியில் எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை, தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த திட்டங்கள் குறித்து நான் கேட்ட கேள்விக்கு நேற்று வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பதில் தரவில்லை. 9 ஆண்டு கால சாதனை குறித்து நான் கேட்ட கேள்விக்கு இதுவரை அமித்ஷா பதில் தரவில்லை எனவும் கூறினார்.