மத்திய அமைச்சர் அமித்ஷா - நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் திடீர் சந்திப்பு..!

Amit Shah
By Nandhini Aug 22, 2022 07:04 AM GMT
Report

மத்திய அமைச்சர் அமித்ஷாவை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

அமித்ஷா - ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் பேரனாவார். சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம் சரணுடன், ஜூனியர் என்.டி.ஆர் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்துப் பேசியுள்ளார். திடீரென அமித்ஷாவை ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்துப் பேசியுள்ளதால் அரசியலில் நுழையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Amit-Shah-N-T-Rama-Rao-JR-meeting