Tuesday, Jul 8, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்

Amit Shah Tamil nadu
By Nandhini 3 years ago
Report

அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார்.

தமிழகபாஜகவின் சார்பில் திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக பாஜக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி ஒரு நாள் பயணமாக கோயம்புத்தூர் வருகிறார்.

கோயம்புத்தூரிலிருந்து காணொலி காட்சிகள் வாயிலாக பாஜக அலுவலகங்களை திறந்து வைக்க உள்ளார்.

தமிழகம் வரும் அமித்ஷா, தமிழக பாஜக மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Amit Shah