"வெற்றி வேல்.. வீர வேல்” அமித் ஷா தமிழில் ட்வீட் செய்தது என்ன?

tamil god edappadi amit shah
By Jon Mar 28, 2021 12:28 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பல தேசிய கட்சித் தலைவர்களும் தமிழகத்தை குறிவைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக தலைவர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்!”

ஏற்கனவே கந்த சஷ்டி கவசம், வேல் யாத்திரை என பாஜக முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.