இந்தியாவின் பலவீனமான உள்துறை அமைச்சர்: அமித் ஷாவை குறிவைக்கும் காங்கிரஸ்

law farmer home minister
By Jon Jan 29, 2021 02:14 PM GMT
Report

இந்தியாவின் பலவீனமான உள்துறை அமைச்சர் அமித்ஷா எனவும் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியது.

இந்தியாவின் பலவீனமான உள்துறை அமைச்சர் அமித்ஷா எனவும், அவரை பிரதமர் மோடி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் உளவுத்துறை தோல்வி ஆகியவற்றுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நீக்கப்பட வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்களை விட்டுவிட்டு விவசாய தலைவர்கள் மீது அரசு வழக்கு பதிந்து வருகிறது. மோடி அரசு தீய சக்திகளுக்கு உடைந்தையாக இருப்பதை இது வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.