ஹிஜாப் சர்ச்சை : “அனைத்து மாணவர்களும் பள்ளி விதித்துள்ள ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்” - உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஒவ்வொரு மாணவரும் பள்ளி விதித்துள்ள ஆடைக் கட்டுப்பாடு மற்றும் சீருடையின்படி செயல்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இந்துத்துவா மாணவர்களின் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது, கர்நாடகாவில் இந்த சம்பவம் மிகப்பெரிய மத ரீதியான மோதலாகவும் வெடித்தது.

இந்துத்துவா மாணவர்கள் பலர் அங்கு காவி துண்டு அணிந்து இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக கோழங்களை எழுப்பினர்,
இந்த நிலையில் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு இஸ்லாமிய மாணவிகள் பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அப்போது ஹிஜாப் விவகாரம் குறித்து பேசிய அவர்,
“அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்குகிறதோ அதனை அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். ', நாடு அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டுமா அல்லது விருப்பத்தின்படி செயல்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
எனது தனிப்பட்ட நம்பிக்கை நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை மட்டுமே உள்ளது.
நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்தவுடன், நான் அதை ஏற்க வேண்டும், எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால், ஒவ்வொரு மாணவரும் பள்ளி விதித்துள்ள ஆடைக் கட்டுப்பாடு மற்றும் சீருடையின்படி செயல்பட வேண்டும் என்று நான் இன்னும் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.