முதல்வர் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் அமித் ஷா! இதற்கு காரணம் யார் தெரியுமா?
சசிகலாவை சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்றும், அதனால் அமித் ஷா முதல்வர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் சூழலில் தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்வதில் கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பாஜக உடன் பேச்சுவார்த்தையை தொடங்கி அதிமுக நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகல் முழுவதும் காரைக்கால், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தொகுதி பங்கீடு குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடைபெற்றது. கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை நேற்று இரவு நீண்ட நேரம் நீடித்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம் சசிகலா தான் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அமித்ஷா சசிகலாவை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் என்றும், ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க தங்களுக்கு 60 தொகுதி ஒதுக்க வேண்டும் பாஜக தரப்பில் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் முடிவு ஏதும் எட்டப்படவில்லை என்றும், அமித்ஷா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தற்போது கூறப்படுகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அமித்ஷா டெல்லி புறப்பட்டு சென்றார். விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.