பள்ளி வாசலில் எழுப்பப்பட்ட அசான் ஒலி : பேசுவதை நிறுத்திய அமித்ஷா, வைரலாகும் வீடியோ
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றார். திங்கட்கிழமை முதல் நேற்று வரை 3 நாள் அமித்ஷா காஷ்மீரில் இருந்தார். அப்போது அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அமித்ஷா காஷ்மீர் பயணம்
பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக அவர் விவாதித்தார். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஷவ்கத் அலி ஸ்டேடியத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசி கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் 1990 முதல் பயங்கரவாத செயல்களுக்கு 42 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
தொழுகைக்காக பேச்சை நிறுத்திய அமித்ஷா
இதில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஒருவர் கூட இல்லை. மோடி அரசு பயங்கரவாதத்தை பொறத்து கொள்ளாது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவை நோக்கி செல்கிறது. விரைவில் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என கூறினார்.
முன்னதாக அருகே உள்ள மசூதியில் தொழுகை அழைப்புக்காக ஆசான்' சத்தம் கேட்டது. இதையடுத்து அமித்ஷா தனது பேச்சை நிறுத்தினார். தொழுகைக்காக அழைப்பு முடிந்த பிறகு மீண்டும் அமித்ஷா பேச்சை தொடர்ந்தார்.
வைரலாகும் வீடியோ
பேச்சை தொடர்வதற்க முன்பு இப்போது நான் பேச்சை தொடரலாமா என கூட்டத்தை பார்த்து கேட்டார். அவர்கள் பேச்சை தொடரலாம் என கூறிய நிலையில் அமித்ஷா மீண்டும் பேசினார்.
In Video: @AmitShah halts his speech during #Azaan.
— Kupwara Times Official (@KupwaraTimes) October 5, 2022
#AmitShah #Baramulla pic.twitter.com/HW7ml9dyTC
அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.