அமித்ஷா வருகை எதிர்ப்பு - கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி - பதற்றத்தில் போலீசார்

Amit Shah
By Nandhini Apr 24, 2022 11:01 AM GMT
Report

மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், சாரம் பகுதியில் கேஸ் பலூன் விற்க இருசக்கர வாகனத்தில் வந்த பலூன் வியாபாரி ஜெய்சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு பொட்டலம் பலூன் மற்றும் 2 சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக மாறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘அமித்ஷாவே திரும்பிப் போ’ என்ற கோஷத்துடன் புதுச்சேரி சாரம் திடலில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. அப்போது, கைதான ஒருவர் சாப்பிட்ட உணவில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து, தரமற்ற உணவு வழங்கியதை கண்டித்து பலர் காவல் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   

அமித்ஷா வருகை எதிர்ப்பு - கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி - பதற்றத்தில் போலீசார் | Amit Shah