புதுச்சேரிக்கு அமித்ஷா வருகை - பலூன் வியாபாரி கைது - நடந்தது என்ன?

Amit Shah
By Nandhini Apr 24, 2022 06:25 AM GMT
Report

புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை தர உள்ளார்.

ஹெலிகாப்டரில் செல்லும் மத்திய அமைச்சர் 390 காவலர்களுக்கான பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அவர் தொடக்கி வைக்க உள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அங்கு ரூ.70 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளதாக மாநில அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், சாரம் பகுதியில் கேஸ் பலூன் விற்க இருசக்கர வாகனத்தில் வந்த பலூன் வியாபாரி ஜெய்சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு பொட்டலம் பலூன் மற்றும் 2 சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக மாறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘அமித்ஷாவே திரும்பிப் போ’ என்ற கோஷத்துடன் புதுச்சேரி சாரம் திடலில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.