எல்லை மீறும் பிக்பாஸ் நிகழ்ச்சி... பாவனிக்கு முத்தம் கொடுத்த அமீர் - வீடியோ உள்ளே

biggboss pavanireddy பிக்பாஸ் amir பாவனி amirkissedpavani அமீர்
By Petchi Avudaiappan Dec 19, 2021 12:19 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன்களுக்குப் பிறகு மீண்டும் முத்தச் சம்பவம் அரங்கேறியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடைசிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிரியங்கா, அமீர், சஞ்சய், ராஜூ, அக்‌ஷரா, பாவனி, தாமரை, அபிநய், வருண் ஆகியோர் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர். 

இதனிடையே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில்  அபிநய் எதுவுமே சொல்லாமல், அவர் தன்னை காதலிப்பது போல தெரிகிறது என கூறிய பாவனியின் செயல்கள் கடந்த வாரம் குறும்படமாக போடப்பட்டு கமல்ஹாசன் முன்னிலையில் பஞ்சாயத்தே நடைபெற்றது. ஆனால் சக போட்டியாளரான அமீர்  உடன் அவர் நெருக்கமாக பழகி வரும் காட்சிகள் அதிகமாக காட்டப்பட்டு வருகிறது. 

மேலும் அபிநய்யை அசிங்கப்படுத்திய பாவனி அமீர் துரத்தி துரத்தி தன்னை காதலிப்பதாக சொல்லி அசிங்கப்படுத்தியும் அமைதியாக இருப்பது ஏன் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் உச்சக்கட்டமாக தன்னை விட சின்ன பையன் நீ என்றும், அமீரின் காதலுக்கு நோ மீன்ஸ் நோ என சொன்ன பிறகும் அமீர் எல்லை மீறி படுக்கையறையில் பேசிக் கொண்டிருக்கும் போது ரகசியம் சொல்வது போல வந்து பாவனிக்கு முத்தம் கொடுத்தது பிக் பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதுவரை அபிநய் விவகாரத்தில் பொங்கிய பாவனி அமீரிடம் அவ்வளவு சாதாரணமாக இப்போ நீ பண்ணது பிடிக்கல என்று மட்டும் சொன்னதை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆரவ் கொடுத்த மருத்தவ முத்தம் பெரும் பரபரப்பை கிளப்பியது. அதற்கு பிறகு பல சீசன்கள் கழித்து இந்த 5வது சீசனில் பாவனிக்கு அவரை விட இளம் வயது அமீர் அதுவும் பாவனி பிடிக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த போதும் முத்தம் கொடுத்தது பிக்பாஸ் ரசிகர்களிடையே கடுப்பை கிளப்பியுள்ளது.