பாவனி கழுத்தில் தாலி கட்டிய அமீர் - குஷியில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

By Nandhini 3 மாதங்கள் முன்

காதலை வெளிப்படுத்திய அமீர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்கள் பாவனி, அமீர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது, பிக்பாஸ் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசுகளை கொடுத்து அனைவரையும் கண்கலங்க வைத்தார். இது குறித்த புரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அமீர் பாவனிக்கு மோதிரம் கொடுக்க, அதை பாவனி வாங்காமல் தயங்கி நின்றார். இறுதியில் அமீர் கொடுத்த காதல் பரிசை பாவனி வாங்கிக்கொண்டார்.

பாவனி கழுத்தில் தாலி கட்டிய அமீர்

இந்நிலையில், இந்த வார பிக்பாஸ் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் அமீர், பாவனியின் கழுத்தில் தாலி கட்டின ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரொமோவில் அமீர், பாவனி கழுத்தில் தாலி கட்டியதைப் பார்த்த, அந்நிகழ்ச்சியில் இருந்தவர்கள் அனைவரும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் பூக்களை தூவி, இவர்களுக்கு ஆசீர் வதித்துள்ளனர். தற்போது இந்த ப்ரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.