உறுதியான திருமண தேதி - அமீர் - பாவனி கல்யாணம் எப்போ தெரியுமா..?

Bigg Boss Pavani Reddy
By Karthick Mar 14, 2024 02:16 PM GMT
Report

 பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அமீர்-பாவனி

பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

amir-and-pavni-to-get-married-soon-news-viral

அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில், சக போட்டியாளரான நடன இயக்குநர் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார்.

காதலரை கரம் பிடித்த 40 வயது எஸ்.ஜே.சூர்யா நாயகி...! குவியும் பாராட்டுக்கள்

காதலரை கரம் பிடித்த 40 வயது எஸ்.ஜே.சூர்யா நாயகி...! குவியும் பாராட்டுக்கள்

அதன்பின் “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்று அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர்.

திருமணம்?

அதனையடுத்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி. மேலும், ஒரே வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் குறித்தான எந்த தகவலும் இது வரை வெளியாகாமல் இருந்தது.

amir-and-pavni-to-get-married-soon-news-viral

இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,இந்த வருடம் நவம்பர் 9 ஆம் தேதி பாவனி பிறந்த நாளன்று திருமணம் நடக்க போகிறது “ என்றார். தெரிவித்துள்ளார் அமீர்.