லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் அமீர் - பாவனி - வீடியோ வெளியிட்ட ஜோடி!

Pavani Reddy
By Sumathi Apr 30, 2023 05:30 PM GMT
Report

அமீர் மற்றும் பாவனி லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அமீர் - பாவனி

பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் பாவனிக்கு சின்னத்தம்பி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் அமீர் - பாவனி - வீடியோ வெளியிட்ட ஜோடி! | Amir And Pavani Livin Relationship Video

அதன் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது அமீர் தனது காதலை அவரிடம் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார்.

லிவ்வின்

அதன்பின், “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்றி அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர். தொடர்ந்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி. அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இருவரும் நடித்துள்ளனர்.

லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் அமீர் - பாவனி - வீடியோ வெளியிட்ட ஜோடி! | Amir And Pavani Livin Relationship Video

இந்நிலையில், இருவரும் லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருந்து வருகின்றனர். அதன்படி, ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அங்கு அமீர் தனது பெரியம்மா மற்றும் அண்ணன் மற்றும் பாவனியுடன் குடும்பமாக லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறோம். எங்க அம்மாவே அமீர் கூட இரு என்று அனுப்பி வைத்தார்கள் என்று பாவனி கூறியுள்ளார்.