கடலில் பேனா சின்னம் வைப்பதில் இருந்து பின் வாங்கியதா தமிழக அரசு - காரணம் என்ன?

M K Stalin M Karunanidhi Government of Tamil Nadu
By Thahir Jul 16, 2023 08:20 AM GMT
Report

மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேனா நினைவு சின்னம் 

சென்னை மெரினா கடலில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகளுக்கு இடையில் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் 134 உயரத்துக்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்தது.

amil Nadu government will withdraw the plan

மத்திய அரசு அனுமதியளித்த நிலையில் 36 கோடி நிதி ஒதுக்கி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எதிர்ப்பு எழுந்தது.

திரும்ப பெற முடிவு 

மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து பேனா நினைவு சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் தேதி மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் நினைவிடம் திறக்கப்படுகிறது. கடலுக்கு பதில் நினைவிடத்திலேயே பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஸ்டாலின் விரும்புவதாக கூறப்படுகிறது.