மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதனால் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும், தொற்று கட்டுக்குள் வந்ததாக அமெரிக்க அரசு அறிவித்தது. மேலும் வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்ததால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சமீபகாலமாக அங்கு கொரோனா அதிகரித்து வருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல் தான் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.இதனால் அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.