11வது முறையாக கர்ப்பமான பிரபல நடிகை - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

kekewyatt americansingerkekewyatt
By Petchi Avudaiappan Feb 24, 2022 04:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமடைந்துள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

R&B இசைக்குழுக்குழுவில் பங்கேற்று தேசிய அளவில் கவனத்தையும் ஈர்த்த பாடகி, பாடலாசிரியர், நடிகை என பன்முக திறமை கொண்ட  கேகே வியாட் சோல் சிஸ்டா, ஹூ நியூ, உட்பட அதிகாரப்பூர்வ ஸ்டுடியோ ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட ஆல்பங்கள் அனைத்தும் சமீபத்தில் பில்போர்டில் முன்னிலையில் உள்ளது. 

11வது முறையாக கர்ப்பமான பிரபல நடிகை - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | American Singer Keke Wyat Motherhood For 11Th Time

தனது 18வயது வயதில் ரஹ்மத் மோர்டன் என்பவரை மணந்த வியாட் 2009 ஆம் ஆண்டு அவரை விவகாரத்து செய்தார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில்  2010 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாமர் ஃபோர்டுடை மறுமணம் செய்து கொண்டார். அவருடன் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் பாடகி வியாட் 8வது முறையாக கர்ப்பமாக இருக்கும் போது மைக்கேல் ஜாமரை விட்டு பிரிந்தார். 

இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலரான ஜக்காரியா டேரிங்கை வியாட் 3வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது பாடகி கேகே வியாட் 11வது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து போட்டோஷூட் ஒன்றையும் அவர் நடத்தி உள்ளார். அதில் சிவப்பு நிற கவுன் அணிந்து கொண்டு, போட்டோஷூட்டிற்காக அவர் தனது வயிற்றை மருதாணி டாட்டூவில் அலங்கரித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சகட்டுமேனிக்கு அவரின் கர்ப்பம் குறித்தும், குழந்தைகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.