பிரம்மாண்டத்தின் உச்சம்: இந்தியா வரும் ஜோ பைடனின் ரூ.27000 கோடி விமானம் - என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணிக்கும் விமானத்தின் சிறப்பம்சங்கள்.
ஏர்ஃபோர்ஸ் 1 விமானம்
இந்தியாவில் நடக்கவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார். இந்நிலையில் அவர் பயணிக்கும் ஏர்ஃபோர்ஸ் 1 விமானத்தை வரவேற்க டெல்லி பாலம் விமான நிலையம் தயாராகி வருகிறது.
அதிபர் ஜோ பைடன் பயணிக்கும் ஏர்ஃபோர்ஸ் 1 விமானத்தின் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம். அமெரிக்க அதிபர்கள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டால், அவர்கள் பயன்படுத்தும் ஏர்ஃபோர்ஸ் விமானமே உலக அளவில் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த விமானத்தில் யுனைட்டெட் ஸ்டேஸ்ட் ஆப் அமெரிக்க என்ற வார்த்தைகளும், அதிபரின் கொடி மற்றும் முத்திரைகளும் இடம்பெற்றிருக்கும்.
தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு போயிங் 747-200B's விமானங்களை அதிபர் பயன்படுத்துவார். இவற்றில் எந்த விமானத்தில் அதிபர் பயணிக்கிறாரோ, அது ஏர்ஃபோர்ஸ் 1 என்று அழைக்கப்படும். ஏர்ஃபோர்ஸ் ஒன் அதிபருக்காக விமான குழுவால் பராமரிக்கப்படுகிறது. விமானி, துணை விமானி, சிறப்பு பொறியாளர்கள், வழிகாட்டிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழு விமானத்தை இயக்குகிறது.
மணிக்கு ரூ.1.66 கோடி ரூபாய்
ஏர்ஃபோர்ஸ் 1 விமானம் 63 அடி உயரம் கொண்டது, அதாவது 6 மாடிக் கட்டடத்திற்கு இணையானது. விமானம் 232 நீளத்தையும், இறக்கையின் பரப்பு 195 அடி நீளம் கொண்டது. 4000 சதுர அடி பரப்பு கொண்ட இந்த விமானத்தில் 3 தளங்கள் இருக்கும்.
இதில் கருத்தரங்க அறை, ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவு தயாரிக்கக் கூடிய இரண்டு உணவு மேடைகள், மருத்துவமனை, செய்தியாளர்கள் சந்திப்பிற்கு தனி அறை, அதிபர் மற்றும் அதிகாரிகள் தங்க பிரத்தியேக அறைகள் ஆகியவை உண்டு. மேலும், விமானத்தில் நிரந்தரமாக ஒரு மருத்துவர் இருப்பார். அறுவை சிகிச்சைக்கென தனி அறையும், அதிபரின் ரத்த வகையும் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.
ஏர்ஃபோர்ஸ் 1 விமானம் மணிக்கு 965 கி.மீ வேகத்தில் பிறக்க வல்லது. இது ஒளியின் வேகத்தில் 92 சதவீதம் ஆகும். நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியும் பெற்றுள்ளதால், இந்த விமானம் கால வரம்பின்றி பறக்கும் திறன் கொண்டுள்ளது. விமானம் முழுவதும் கவச முலாம் பூசப்பட்டுள்ளதால், அணு ஆயுதங்களைக் கூட தாங்கும் சக்தி கொண்டது. விமானத்தில் இருந்து தரைக்கும், பிற விமானங்களும் தொடர்பு கொள்ளும் வகையில் அதி நவீன வசதி கொண்டது.
அதிபர் நாட்டில் இல்லாத நேரத்தில் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்பட்டால், விமானத்தில் இருந்து கட்டளைகள் பிறப்பிக்க கட்டுப்பாட்டு அறையும் உள்ளது. சுமார் 27000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த விமானத்தை இயக்க மணிக்கு ரூ.1.66 கோடி ரூபாய் செலவாகிறது.