பிரபல பாப் பாடகியை கன்னத்தில் கடித்த பாம்பு - வைரலாகும் வீடியோ பதிவு

america bitten by snake pop singer maeta
By Swetha Subash Dec 28, 2021 06:18 AM GMT
Report

அமெரிக்காவின் பிரபல பாடகி மேத்தாவின் கன்னத்தை பாம்பு கடித்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் பிரபல பாடகி மேத்தா (Maeta) தன்னுடைய கன்னத்தில் பாம்பு கடித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க பாப் பாடகியான மேத்தாவை படப்பிடிப்பு தளத்தில் முகத்திலேயே பாம்பு ஒன்று கடித்துள்ளது.

இவர் தன்னுடைய இசை ஆல்பத்துக்காக பாம்புகள் சூழ ஒரு வீடியோவை படம் பிடித்துள்ளார்.

அப்போது அவரது உடலின் மீது இரண்டு பாம்புகள் விடப்பட்டது. பாடகி தனது மார்பின் மேல் ஒரு கருப்பு நிற பாம்பை வைத்துக்கொண்டிருந்தார்.

அந்த பாம்பு கொஞ்சம் நகர்ந்து வந்தது ,அந்த நேரத்தில் அருகில் இருந்த ஒருவர் வெள்ளை பாம்பை அவர் மீது விட முயற்சி செய்தபோது அந்த பாடகி கன்னத்திற்கு அருகில் வந்த பாம்பு அவரின் முகத்தில் கடித்தது.

இதனால் பதற்றமடைந்த மேத்தா உடனடியாக அந்த பாம்பை தூக்கி எறிந்தார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.