ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை - அதிர வைத்த அமெரிக்க அதிபர்

america joebiden isis AbuIbrahimalHashimialQurayshi
By Petchi Avudaiappan Feb 03, 2022 04:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கலிஃபா ஆட்சியை நிறுவி அதனை சிரியாவுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அடிப்படை நோக்கத்தோடு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. இது கடந்த 2004 ஆம் ஆண்டு முதல்  அல்-கொய்தா இயக்கத்தோடு இணைந்து செயல்பட தொடங்கியது.

அல்கொய்தா அமைப்பின் தலைவரானர் பின்லேடனை கொன்று வீழ்த்திய பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டு வந்தது.இதனைத்தொடர்ந்து சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி அல்-குரேஷி சிரியாவில் அமெரிக்கப்படைகளால் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். 

மேலும் இந்த நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க படைகள் பத்திரமாக திரும்பியுள்ளனர். கடவுள் நமது படைகளை பாதுகாக்கட்டும் எனவும் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.