நரக வேதனை தான்; முதலை போன்ற தோலால் கதறும் நபர் - உருக்கமான வீடியோ
கடுமையான கரடுமுரடான தோலினால் நபர் ஒருவர் வேதனை அனுபவித்து வருகிறார்.
முதலை தோல்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜிம்மி. இவர் அரிய வகை சரும பிரச்சனையால் அவதியுற்று வருகிறார். இதுகுறித்து வாழும் நரகம் என இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது வறண்ட உடல் முழுவதையும் கீறுவதைக் காணலாம், அவர் தனது தோலை உரிக்கும்போது இரத்தம் வருகிறது. இந்த புடைப்புகள் என் கால்கள், என் கைகள், என் முதுகு, என் மார்பு முழுவதும் உள்ளன, நான் ஒரு முதலையின் மீது என் விரல்களை வைப்பது போல் உணர்கிறேன்.
உருக்கமான வீடியோ
என் தோலில் இருப்பது ஒரு அரிப்பு நரகம். தனது உடலின் 90 சதவீதம் வறண்ட சருமத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆடைகள் அணியும் போது மிகவும் மோசமாக வலிக்கிறது, நான் ஷார்ட்ஸ் அணிய வேண்டும், சட்டை போட முடியாது என கூறுகிறார்.
மேலும், அமெரிக்காவில் பிம்பிள் பாப்பர் என்று பிரபலமாக அறியப்பட்ட தோல் மருத்துவரான சாண்ட்ரா லீயை ஜிம்மி சந்தித்து சிகிச்சை பெறச் சென்றார். "தினமும் அது ஒரு நரகம் தான், நான் சொறிந்து கொண்டே இருக்க வேண்டும் என எனக்குத் தெரியும், மனதை விட்டுவிடாமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்" என்றார்.