5 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்த மருத்துவர்..காரணத்தை கேளுங்க -ஆடிபோய்டுவீங்க!
அமெரிக்க மருத்துவர் ஒருவர் 5 ஆண்டுகளாக குளிக்காமல் இருப்பதற்காக காரணத்தை தெரிந்து கொள்வோம்.
மருத்துவர்
நம் உடலில் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க வேண்டுமானால் தினமும் குளிக்க வேண்டும். சில சமயங்களில் 2 நாட்களுக்குக் குளிக்காமலிருந்தால் உடலில் 1000 வகையிலான பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 5ஆண்டுகளாகக் குளிக்காமலிருந்துள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.அமெரிக்காவில் வசித்து வருபவர் ஜேம்ஸ் ஹாம்ப்ளின். இவர் மருத்துவராக உள்ளார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாகக் குளிக்காமல் இருப்பதற்கான காரணத்தை நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.அதில், சோப்புகள் மற்றும் ஷாம்புகள் அதிக அளவில் நமது உடலில் தீமைகள் ஏற்படுகிறது. ஒரு வேலை நாம் குளிக்காமலிருந்தால் நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றத்தை அறிய விரும்பினேன் என்று கூறினார்.
காரணத்தை கேளுங்க..
மேலும் தான் குளிப்பதை நிறுத்திய பிறகும் கூட தன் உடலிலிருந்து துர்நாற்றம் ஏதும் வீசவில்லை" என்று கூறினார்.தொடர்ந்து பேசியவர் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் பயன்பாடு உண்மையிலேயே நன்மை இருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ளவும் தான் விரும்பியதாகக் கூறினார்.
நாம் உடற்பயிற்சி செய்த பிறகும், உடல் வியர்வையால் நனைந்த பின்னும் கூட நீங்கள் முழுமையாகக் குளிக்க வேண்டிய அவசியமில்லை.குறிப்பிட்ட உடல் பகுதிகளை வெறுமனே தண்ணீரில் கழுவினால் போதும்" என்று ஜேம்ஸ் ஹாம்ப்ளின் கூறினார்.