இலங்கைக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கர்களுக்கு அரசு எச்சரிக்கை

economiccrisis srilankacrisis USadvicescitizens emergencysituation
By Swetha Subash Apr 07, 2022 01:13 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கர்களுக்கு அரசு எச்சரிக்கை | American Citizens Asked To Avoid Going To Srilanka

இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்கர்கள் இலங்கைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறும்போது,

‘இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர். இலங்கையில் தினமும் அதிகநேரம் மின்தடை உள்ளது. பொது போக்குவரத்து சீராக இல்லை. இதனால் அங்குள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

புதிதாக இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்களில் அரசு அலுவலகங்கள்,

ஓட்டல்கள், கிளப்புகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு போட்டிகள், கல்வி நிலையங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களை குறிவைத்து சிறிய அல்லது எச்சரிக்கையின்றி பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.