17 வருடங்களாக முகத்தில் தாடியுடன் இளம்பெண் - காரணம் இதுதான்!
17 வருடங்களாக இளம்பெண் முகத்தில் தாடியுடன் வாழும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகத்தில் தாடி
அமெரிக்காவைச் சேர்ந்தவர் டகோடா கோக்(30). இவருக்கு தன் இளமை பருவத்தில் இருந்தே முகத்தில் தாடி வளரத் தொடங்கியுள்ளது. தனது 13 வயதில் முகத்தில் முடி வளருவதை கவனித்துள்ளார். இதனால், சுமார் 10 வருடங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

முதலில் ஓரிரு இடங்களில் மட்டுமே வளர்ந்த முடி, நாளடைவில், நீளமாகவும், அதிக அடர்த்தியுடனும் வளரத்தொடங்கியுள்ளது. இதனால், தன் முகத்தில் இப்படி வளரும் முடியை அகற்ற, பார்லர்களுக்கு சென்று, Waxing செய்துள்ளார். ஒரு நாளைக்கு 2முறை சவரம் செய்து கொண்டுள்ளார்.
மன உளைச்சல்
இதுகுறித்து அவர் கூறுகையில், ”நான் வளர்ந்த காலத்தில், பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது. நான் சலூன்களுக்கு சவரம் செய்ய சென்றால், பெண்கள் அங்கு வரக்கூடாது என்றும், பெண்கள் முகத்தில் முடி வளர்த்துக்கொள்ள கூடாது என்றும் என்னிடம் அறிவுரை கூறுவார்கள்” என்றார்.

தொடர்ந்து 2015ல் அவரது நண்பர்கள் டகோடாவை சர்கஸில் நிகழ்ச்சியில் பங்குபெற கூறியுள்ளனர். அதன்படி தாடியுடன் இருக்கும் பெண்ணாக கலந்துக் கொண்டுள்ளார். அதுமுதல் ஷேவ் செய்து கொள்வதையும், வேக்சிங் செய்து கொள்வதையும் படிப்படியாக கைவிட்டுள்ளார்.
அதனையடுத்து இதனை ஏற்றுக்கொள்ள தொடங்கிய அவருக்கு குடும்பத்தினரும், நண்பர்களும் ஆறுதலாக இருந்துள்ளனர்.
அவரது உடலில் அட்ரீனல் சுரப்பிகள் அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்வதால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.