அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்... - போலீசார் அதிரடி...!

Flight
By Nandhini Mar 05, 2023 08:50 AM GMT
Report

மதுபோதையில் அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவருக்கு இனி விமானத்தில் பயணிக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது.

சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்

நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்த விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த ஆர்யா வோஹ்ரா (21) என்ற மாணவருக்கு இனி விமானத்தில் பயணிக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆர்யா வோஹ்ரா (21) என்பவர் அமெரிக்காவில் படித்து வருகிறார்.

இவர் நேற்று ஜேஎஃப்கேயில் இருந்து டெல்லிக்கு வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் சக பயணி மீது ஆர்யா சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இது குறித்து சக பயணி ஒருவர் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு போலீசார் ஆர்யா மீது போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். ஆர்யா இனி விமானத்தில் பயணிக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடை விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐஜிஐ விமான நிலையத்தின் டெல்லி போலீஸ் டிசிபி தேவேஷ் குமார் மஹ்லா தெரிவித்துள்ளார்.       

american-airlines-bars-indian-citizen-urinating