”எனக்கு கொரோனா இருக்கு” சூப்பர் மார்கெட்டில் அச்சத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு 25 லட்சம் அபராதம் !
கடந்த 2020 மார்ச் மாதம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர்மார்கெட்டிற்குள் நுழைந்த 37 வயதான மார்கரெட் அன் கிரிக்கோ என்ற பெண் ஒருவர் சூப்பர் மார்கெட்டிற்கு நடுவே சென்று "எனக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது. இனி உங்களுக்கு எல்லாம் அது பரவ போகிறது" என கத்தி அங்கு வேண்டுமென்றே இரும்பியுள்ளார்.
இதனால் அங்கிருந்த மக்கள் உடனடியாக சூப்பர்மார்கெட்டிலிருந்து அலறியடித்து வெளியே ஓடினர். சூப்பர் மார்கெட் பாதுகாவலர்கள் அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
பின்னர் இந்த பெண் ஏன் இப்படி செய்தார் என்ற விசாரணையில் அவர் மது போதையில் இருந்தார். தன் சுய நிலையில் இல்லாத போது இதை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் அந்த பெண் தனக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என சொல்லி இருமல் செய்ததால் அந்த சூப்பர் மார்கெட்டில் இருக்கும் பொருட்கள் மீது கொரோன வைரஸ் இருக்கலாம் என்ற பீதியில் அங்கு மக்கள் யாரும் மறுநாள் வரவில்லை.
அதனால் சூப்பர் மார்கெட் நிர்வாகம் அங்கிருந்த சுமார் 35 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ25.96 லட்சம் மதிப்பிலான பொருட்களை மொத்தமாக அப்புறப்படுத்தி தீயில் போட்டு கொளுத்தினர். மேலும் சூப்பர் மார்கெட் முழுவதையும் சேனிட்டைஸ் செய்தனர்.
இந்நிலையில் போதையில் பெண் தங்கள் சூப்பர் மார்கெட்டிற்கு வந்து பொய் சொல்லி இருமியதால் அவர்களுக்கு ரூ25 லட்சத்திற்கு மேல் நஷ்டம் எனவும், அதை திரும்ப தரும்படியும் அந்த பெண்ணிற்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்த மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதை விசாரித்த நீதிபதி சமீபத்தில் அந்த பெண்ணிற்கு 2 ஆண்டு சிறை மற்றும் 30 ஆயிரம் டாலர் அதவாது சுமார் ரூ25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.