ஈக்வடாா் சிறையில் பயங்கர மோதல் 68 கைதிகள் பலி
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் இரு குழுவினரிடையே நடைபெற்ற மோதலில் 68 கைதிகள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: குவாயாகில் நகர சிறைச் சாலையில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.
அதில் ஒரு குழுவினா் சுவற்றில் வெடிவைத்து உடைத்து மாற்றுக் குழுவினா் இருந்த பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினா்.
மேலும், எதிரிகளை மூச்சுத் திணறி உயிரிழக்கச் செய்வதற்காக மெத்தைகளை எரித்தனா்.
அதனைத் தொடா்ந்து இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்களில் 68 போ உயிரிழந்தனா். சிறைக்குதென் அமெரிக்க நாடான ஈக்வடாரில்,
சிறையில் இரு குழுவினரிடையே நடைபெற்ற மோதலில் 68 கைதிகள் உயிரிழந்தனா்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸாா் முயன்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.