திருமண நிகழ்ச்சியில் வந்த சவப்பெட்டி... - திறந்து பார்த்த மணமகள் அதிர்ச்சி...!
திருமண நிகழ்ச்சியில் வந்த சவப்பெட்டியை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகளின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் வந்த சவப்பெட்டி - மணமகள் அதிர்ச்சி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள், மணமகனுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு பெரிய சவப்பெட்டி வந்து இறங்கியது. அந்த சவப்பெட்டியை திறந்து பார்த்த மணமகள் சற்றே அதிர்ச்சி அடைந்தார்.
மணமகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்பதற்காக மணமகன், Undertaker பாணியில் எண்ட்ரி கொடுத்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் வியந்துவிட்டனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய வழக்கமான பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
