அமெரிக்கா இந்தியர்களுக்கு குட் நியூஸ் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா தாக்கல்
அமெரிக்க நாடாளமன்றாத்தில் புதிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதனால் அமெரிக்காவில் இருக்க கூடிய லட்சக்கணக்கான இந்தியர்கள் பலன் பெறுவார்கள் என கூறப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021என்கிற சட்ட மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார்.
இந்த குடியேற்ற மசோதா முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. இது குறித்து செனட்டர் பாப் மெனண்டெஸ் மற்றும் பிரதிநிதிகள் சபை லிண்டா சான்செஸ் செய்தியாளர்களிடம் கூறும் போது குடியேற்ற சீர்திருத்தத்திற்காக அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021 இயற்றப்பட்டுள்ளது.
இந்த முக்கிய சட்டத்திருத்தம் க்ரீன் கார்டுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவர்களுக்கு நிரந்திர குடியுரிமை கிடைக்கும் எனவும் இதனால் இந்தியர்கள் அதிக பலன் பயனடைவார்கள் எனவும் கூறினார்.