கடவுள் நம்பிக்கை தான் என்னை காப்பாத்தியிருக்கு : டி. ராஜேந்திரன்
அண்மையில் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்திரன், உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.
திரைப்பட டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டி.ராஜேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அமெரிக்கா புறப்பட்ட டி.ஆர்
இதையடுத்து டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.ராஜேந்தரை உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்தன.
விசா நடைமுறைகளும் முடிந்துள்ளன. இதையடுத்து டி.ராஜேந்தர் சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இன்று விமானத்தில் அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார். குடும்பத்தினரும் அவருடன் செல்கிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்கா செல்வதற்கு முன்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி. ராஜேந்திரன் பேசியதாவது,
எனக்கு உடல் நலக் குறைவு என்றவுடன் பிரார்த்தனை செய்த அனைத்து திரையுல ரசிகர்களுக்கும், சிம்பு ரசிகர்களுக்கும், எனது கட்சிக்காரர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், அவர்களின் அன்பிற்கும் நன்றி. என்னை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.