நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..தீப்பற்றி எரியும் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில்கள்

America Viral Video Train Firing Track
By Thahir Jan 28, 2022 09:31 PM GMT
Report

தீப்பற்றி எரியும் தண்டவாளத்தில் ரயில்கள் பயணிக்கும் காட்சிகள் தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தீவைக்கப்பட்டு ரயில்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் பனிகாலம் நிலவி வரும் நிலையில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.இதனால் ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்கள் பனிப்பொழிவால் உறைந்து காணப்படுகிறது.

இதனால் ரயில்கள் வந்து சேருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் இதனால் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து உறை பனியில் இருந்து தண்டவாளங்களை மீட்க சிறிய அளவிலான தீ வைக்கப்படுகிறது.

தீ எரிந்து கொண்டிருக்கும் போது அதில் ரயில்கள் இயக்கப்படுகின்றனர்.தீப்பற்றி எரியும் தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.