அமெரிக்காவில் நிலநடுக்கம்; குலுங்கிய நகரம் - மக்கள் அலறி அடித்து ஓட்டம்…!

United States of America Earthquake
By Nandhini Dec 17, 2022 05:50 AM GMT
Report

அமெரிக்காவில் மேற்கு டெக்சாஸில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அமெரிக்க நகரம் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக பூமி அதிர்ந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. எனினும் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேனர்.

இந்த நிலநடுக்கம் டெக்சாஸ் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக இருந்ததாகவும், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5:35 மணிக்கு ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இது மிட்லாண்டிலிருந்து வடமேற்கே சுமார் 14 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மிட்லாண்டில் உள்ள தேசிய வானிலை சேவை மையம், டெக்சாஸ் மாநில வரலாற்றில் 4வது வலுவான நிலநடுக்கம் என்று ட்வீட் செய்துள்ளது.   

america - earthquake