ஒரு நதியையே அப்படியே உறிஞ்சும் பிசாசு குகை; விலகாத மர்மம் - எங்கு தெரியுமா?
முழு நதியையும் உறிஞ்சும் குகை ஒன்று இன்றும் மர்மமாய் நீடித்து வருகிறது.
பிசாசு குகை
அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள நீதிபதி சி.ஆர் மேக்னி ஸ்டேட் பூங்காவில் குகை ஒன்று உள்ளது. அதனை 'டெவில்ஸ் கெட்டில்' என அழைக்கின்றனர்.
இது ஆற்றில் இருந்து விழும் நீரை அந்த சிறிய பள்ளமான குகை உறிஞ்சுகிறது. இந்த துவாரம் தான் குகை போன்று காட்சியளிக்கிறது. இதில் விழும் ப்ரூல் நதியின் நீர் ஒரு முறுக்கான குறுகிய பாறைப் பாதையின் கீழே விழுவதாகக் கூறப்படுகிறது.
விலகாத மர்மம்
பின்னர் அது முழுவதும் இந்தக் குகையில் உறிஞ்சப்படுகிறது. முழு நதியின் நீரும் எப்படி குகைக்குள் இருக்கும்? ஆற்றின் நீர் எங்கே செல்கிறது? என நீங்காத மர்மமாகவே விளங்கி வருகிறது.
இதற்கான பதிலையும் வல்லுநர்கள் இன்றும் தேடி வருகின்றனர்.
நதி முழுவதுமாக உறிஞ்சப்பட்ட பிறகும் இந்தக் குகை நிரம்புவதில்லை என்று நம்பப்படுவதால் உள்ளூர் மக்கள் இதனை பிசாசு குகை என அழைக்கின்றனர்.