கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சிகர தகவல்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு ஒரே வாரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தைச் சேர்ந்த செவிலியர் மாத்யூ, கடந்த 18 -ம் தேதி, பைசர் நிறுவனம் உருவாக்கிய Pfizer என்ற தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டதுடன், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் தடுப்பூசி போட்ட ஒரே வாரத்தில் திடீரென 24ம் தேதி மாலை குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து 26ம் தேதி பரிசோதனை செய்தபோது, கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சான் டியாகோ தொற்று நோய் நிபுணரான டாக்டர் டாக்டர் கிறிஸ்டியன் ரமர்ஸ் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் ஒருவரது உடலில், கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாக 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும்.
எனவே, ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.